நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கும் வேறுபாடு கிடையாது": உதயநிதி ஸ்டாலின்

மதுரை:

பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் மதுரையில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை மக்களிட போதிக்க வேண்டும் என்பவை.

ஒருவரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ்தான்.

பிறர் மீது இரக்கம் காட்டுங்கள் என்று கிறிஸ்துவம் சொல்கிறது, அதைத்தான் திமுக பின்பற்றுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை, நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம் என்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

நலத்திட்ட உதவி

வெறுப்பு பேச்சு, பிளவுபடுத்தும் பிரசாரங்களை புறம் தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணியினருக்கு, கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மீது பயம் உள்ளது, எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது. ஒன்றிய அரசின், பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது. சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது, தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் உதயநிதி. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset