நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு

திருநெல்வேலி:

இன்று 21.12.2025 நெல்லை வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி சந்தித்தார். 

இச்சந்திப்பின் போது தமிழக முஸ்லிம்களின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அவர் வழங்கினார்.

சிறைவாசிகள் விடுதலை, பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அரசின் அனுமதி பெறுவதிலுள்ள நடைமுறை சிரமங்களை நீக்குதல், சச்சார் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது, வக்ஃப் வாரிய உறுப்பினராக மார்க்க அறிஞர் ஒருவரை நியமிப்பது முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் ஜமாஅத்துல் உலமா தலைவர் விளக்கம் அளித்தார்.

உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக முதல்வர் அப்போது உறுதி அளித்தார்

முதல்வர் அருகில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் ஐ. ஏ. எஸ் உள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset