நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு

சென்னை: 

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு பதிவேடு தொடங்கிய ஓராண்டிலேயே 5064 குழந்தைகள் பதிவாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் 7 மருத்துவக் கல்லூரிகளில் டைப்-1 நீரிழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டில் மேலும் 13 சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.13 சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்ட பிறகு மேலும் 13 சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

உயிரிழப்பை தடுக்கவும் தொடர் சிகிச்சையை உறுதிசெய்யவும் டைப்-1 நீரிழிவு நோய் பதிவேடு 2024 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. 

அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் இந்த பதிவேட்டில் பதிவுசெய்யப்படுகின்றனர். 

சிகிச்சை தருவோருக்கு விழிப்புணர்வு, மாவட்ட வாரியாக நோய் பாதிப்பு, குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சையை பதிவேடு செய்யப்படுகிறது. 

அரசு சுகாதார கொள்கையை வகுக்க தரவுகள் மற்றும் இன்சுலின் வழங்குவதை திட்டமிடுவது ஆகியவற்றை பதிவேடு உறுதிசெய்யும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset