நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஈரோட்டில் விஜய் பிரசாரம்: பள்ளிக்கு நாளை விடுமுறை

ஈரோடு:

ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) விஜய் மக்கள் சந்திப்பு பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இந்த நிலையில், த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே பிரபல தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல்  அதிகமாக இருக்கும் என்பதால், மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்ல முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. 

இந்தநிலையில் அந்த பள்ளிக்கூடத்துக்கு  மட்டும் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கூடம் சார்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப் தகவல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், நாளை நடக்க இருந்த தேர்வு 26-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset