நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரட்டல் வழக்கில் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி கைது

அலோர்ஸ்டார்:

நஜிப் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவரை எம்ஏசிசி அதிகாரிகள் கைது செய்தனர்.

கெடாவில் உள்ள ஒரு மஹாத் தஹ்ஃபிஸின் தலைவரான நஜிப்பின் வலுவான ஆதரவாளரை மிரட்டி லஞ்சம் கேட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களையும் எம்ஏசிசி கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று கெடாவில் உள்ள அலோர் ஸ்டாரில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் பதிவு செயல்முறை முடிந்ததும் அவர் இன்று காலை எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset