செய்திகள் இந்தியா
அதிர்ஷ்ட காருக்கு 4 லட்ச ரூபாய் செலவில் இறுதி ஊர்வலம்:விவசாயியின் வினோத பாசம்
அகமதாபாத்:
குஜராத்தில் ஒரு விவசாயி தமது அதிர்ஷ்ட காருக்கு 4 லட்ச ரூபாய் செலவில் இறுதி ஊர்வலம் நடத்தி காரை அடக்கம் செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
அம்ரேலி மாவட்டம் படார்சிங்கே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலரே என்ற விவசாயி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
கார் வாங்கிய தருணமோ என்னவோ, அவரின் நிலைமை அப்படியே தலைகீழானது.
வருமானம், வசதி வாய்ப்பு, மகிழ்ச்சி என அனைத்தும் சஞ்சய் போலரேவுக்கு கணக்கில் அடங்காமல் வந்துள்ளது.
அபரிதமான செழிப்பு, சந்தோஷம் என காருடன் வீட்டுக்கு வந்த தருணம் முதல் வாழ்வில் பெரிய ஏற்றம் கண்டுள்ளார். தமது அனைத்து முன்னேற்றத்துக்கும் கார் வந்த சமயமே காரணம் என்று எண்ண ஆரம்பித்தார்.
இந் நிலையில் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் எப்போதும் எங்களின் நினைவில் கார் இருக்க வேண்டும் என்பதற்காக காருக்கு சமாதி கட்ட அவர் திட்டமிட்டார்.
இதற்காக பத்திரிகை அடித்து கார் அடக்கம் செய்யும் நாளன்று அவசியம் வருமாறு ஊரில் உள்ள அனைவருக்கும் விநியோகித்தார்.
அந்த நாளும் வர, ஆயிரக்கணக்கான ஊர்மக்கள் முன்னிலையில் தமது அதிர்ஷ்ட காரை சொந்த நிலத்தில் அடக்கம் செய்தார்.
இதற்காக அவர் ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார். குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்முடன் வாழ்ந்து மறைந்தால் அவருக்கு எப்படி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோமோ அதேபோன்று சடங்குகளை தமது ராசியானன காருக்கு, சஞ்சய் போலரே குடும்பத்துடன் செய்தார்.
பின்னர், பெரிய ஜேசிபி எந்திரம் கொண்டு தோண்டப்பட்ட குழியில் ராசியான கார் இறக்கப்பட்டது. கார் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
சஞ்சய் போலரே, அவரது குடும்பத்தினர் மண் அள்ளி போட, பிரியா விடையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 13, 2024, 12:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
November 12, 2024, 10:26 am
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm
முடித்திருத்தகங்களில் பெண்களுக்கு ஆண்கள் சேவை செய்யக் கூடாது: உ.பி. அரசுக்கு பரிந்தரை
November 9, 2024, 4:28 pm
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
November 8, 2024, 7:00 am
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
November 8, 2024, 6:54 am