
செய்திகள் விளையாட்டு
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்திற்கு கால்பந்துப் போட்டியை காண சென்ற இஸ்ரேல் கால்பந்து ரசிகர்களை அரபுதேச ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு கால்பந்துப் போட்டியை காண்பதற்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், கால்பந்து போட்டி நடந்த முடிந்த பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் சிலர் அரபு தேசத்தின் ஆதரவாளர்களை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அரபுதேச ஆதரவாளர்கள், இஸ்ரேலிய ரசிகர்களை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக 60 பேரை நெதர்லாந்து போலிசார் கைது செய்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am