நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் பணி ஓய்வு பெற்றேனா? ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம்.குமார் மறுப்பு

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் பணியிலிருந்து தாம் பணி ஓய்வு பெற்றதாக வெளிவந்துள்ள தகவலை ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம்.குமார் மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் தாம் பணி ஓய்வு பெற்றதாக வெளிவந்துள்ள செய்தி போலியானது என்றும் அவர் உறுதியாக கூறினார். 

போலிச் செய்திகளைப் பரப்புவது தீவிரமான ஒன்று என்றும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட அமலாக்கத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதில் வழக்கம் போல் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் மேற்கொண்டு வருவதால், தனது ஓய்வு தொடர்பாக டிக்டாக்கில் வைரலான காணொலி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது என்று குமார் கூறினார்.

குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நம்பகத்தன்மையற்ற மற்றும் பொறுப்பற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ஜொகூர் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் நிகழும் மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset