நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விவசாயிகள் மீது கார் ஏற்றிய இந்திய அமைச்சரின் மகன்: போலீஸார் விசாரிக்க அனுமதி

லக்கீம்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்திய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3ஆம் தேதி நடத்திய பேரணியில் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்தனர்.

அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்கியதில் இந்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள் உயிரிழந்தனர்.

சம்பவத்தின்போது சென்ற காரில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச அரசின் விசாரணை நடவடிக்கைகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

அதையடுத்து, லக்கீம்பூர் வன்முறை தொடர்பான விசாரணையை மாநில காவல் துறை துரிதப்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவை அக்டோபர் 12- 15ஆம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset