நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்

புது டெல்லி: 

சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் இரவோடு இரவாக வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2019இல் உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முன்அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசு புல்டோசருடன் வந்து ஒரே இரவில் மக்களின் வீட்டை இடித்துவிட முடியாது.

நிலங்களை கையகப்படுத்திவிட்டு நோட்டீஸ் அளித்த பின்னர் அரசு வீடுகளை இடித்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக ஒரே இரவில் வீடுகளை இடிப்பது அரசின் மேலாதிக்க நிலையை காட்டுகிறது.

மேலும், ஒரே இரவில் வீட்டை இடித்ததற்கு அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர் காரணமா? என்று தலைமைச் செயலர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலை விரிவாக்கத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த இந்த வழக்கின் உத்தரவை அனைத்து மாநில தலைமைத் செயலர்களுக்கும் உச்சநீதிமன்ற பதிவாளர் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வீட்டை இழந்த உரிமையாளுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தர பிரதேச அரசின் புல்டோசர் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே கடும் அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள து.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset