நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறப்பு அந்தஸ்து வழங்க ஜம்மு காஷ்மீர் பேரவையில் தீர்மானம்

ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று யூனியன் பிரதேச பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அரசியல்சாசனத்தில் 370 சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019இல் பாஜக ரத்து செய்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர்  சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க கோரும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில்  துணை முதல்வர் சுரேந்தர் சவுத்திரி தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரும், பாஜக உறுப்பினருமான சுனில் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். இது விதிமுறைகளுக்கு எதிரானது என்று பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு இடையே காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset