நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்கா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்காவின் முதற்கட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.

Rainforest Wild Asia எனப்படும் அஃது ஆசியாவின் முதல் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்காவாகத் திகழும்.

29 வகை விலங்குகளும் 7,000 தென்கிழக்காசிய மர வகைகளும் கொண்ட மழைக்காடு போல பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான அனுபவங்களை விரும்புவோருக்காக உயரத்திலிருந்து குதித்தல், சவால்மிக்க குகைப் பயணங்கள் எனப் பல நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் இதுவரை கண்டிராத அரியவகை பிரான்சுவா லங்குர் குரங்குகளையும் (Francois langur) பிலிப்பீன்ஸ் புள்ளிமான்களையும் (Philippine spotted deer) பூங்காவில் காணலாம்.

அடுத்த கட்டமாகத் திறக்கப்படவுள்ள பூங்காவின் Rainforest Wild Africa பகுதி, ஆப்பிரிக்காவின் மடகாஸ்கார் (Madagascar) பகுதியின் தழுவலுடன் வடிவமைக்கப்படுவதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset