செய்திகள் இந்தியா
தோனியுடன் ட்ரம்ப்: வைரலாகிவரும் போட்டோ
வாஷிங்டன்:
கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் தோனியும், அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகும் ட்ரம்பும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
கடந்த 2023-ல் அமெரிக்கா சென்றிருந்தார் எம்.எஸ்.தோனி. அப்போது தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோனியை அழைத்திருந்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் டொனால்டு ட்ரம்ப், தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துகொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்புக்கு தோனி வந்தார்.
அப்போது ட்ரம்புடன் இணைந்து தோனி சிறிது நேரம் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்றார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது அதிபர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தையொட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 6:35 pm
நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணைச் சித்திரவதை செய்த கணவர் கைது
April 2, 2026, 6:33 pm
மனைவியைக் கொன்ற கணவனுக்குச் சிறை: காஜியாபாத் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
April 2, 2026, 1:06 pm
சண்டிகரில் பரபரப்பு: பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
April 2, 2026, 11:09 am
ஐ.பி.எல் தொடருக்காக இந்தியா வந்த பிரிட்டிஷ் பொறியாளர் மரணம்: மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை
April 1, 2026, 5:33 pm
