நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் மதரஸாக்களை மூடும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து

புது டெல்லி:

உத்தர பிரதேசத்தில் மதராஸாக்களை மூட அலகாபாத் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

2004-இல் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மதரஸாக்கள் செயல்பட அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் மூலம், உத்தர பிரதேசத்தில்  16,000 மதரஸாக்களில் பயின்று வரும் 17 லட்சம் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், மதரஸா கல்வி வாரியத்தின் நோக்கம் மற்றும் தேவையில் தவறில்லை. இந்த வாரியத்தை அமைப்பது மதச்சார்மின்மையை மீறுவதாக உள்ளது என்ற உயர்நீதிமன்றத்தின் பார்வை சரியல்ல.  

சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாப்பது மற்றும் இத்தகைய கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதுமே மாநில அரசின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset