நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பொய்த் தகவல்களை வெளியிட்டதாக  விக்கிப்பீடியா இணையதளத்துக்கு இந்திய  அரசு நோட்டீஸ்

புதுடெல்லி:

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக  விக்கிப்பீடியா இணையதளத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.

விக்கிப்பீடியா இணையதளத்தில் ஒருதலைப்பட்சமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தொடர் புகார்கள் குவிந்தன. விக்கிப்பீடியா இணையதளத்தில் தகவல்களைத் திருத்தும் அதிகாரம் சிறிய குழுவுக்கே உள்ளதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. விக்கிப்பீடியா இணையதளத்தை தரவுகளை வெளியிடும் பதிப்பாளராக ஏன் மாற்றக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்து தவறான தகவலை விக்கிப்பீடியா பதிவிட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. 

ஏஎன்ஐ செய்தி முகமையைப் பற்றி போலியான தகவல்களை திருத்தியது யார் என்ற விவரத்தை வெளியிடாதது ஏன் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset