செய்திகள் இந்தியா
வக்பு மசோதா தலைவர் மீது எதிர்க்கட்சிகள் புகார்
புது டெல்லி:
வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதாம்பிகா பால் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் குழுவில் காங்கிரஸின் முகமது ஜாவேத், இம்ரான் மசூத், திமுக எம்.பி. ஆ.ராசா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அகில இந்திய மஜ்லீஸ் எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் இடம்பெற்றனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், குழுவின் கூட்டம் எத்தனை நாள்கள் நடத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் தன்னிச்சையாக தலைவர் ஜெதாம்பிகா பால் எடுப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குழு உறுப்பினர்களுடன் முறையாக தலைவர் கலந்து ஆலோசிக்க உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2024, 7:52 am
தோனியுடன் ட்ரம்ப்: வைரலாகிவரும் போட்டோ
November 6, 2024, 2:30 pm
உ.பி.யில் மதரஸாக்களை மூடும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து
November 6, 2024, 2:23 pm
கல்வீச்சை தொடர்ந்து ரயில் மீது துப்பாக்கிச்சூடு
November 6, 2024, 1:17 pm
பொய்த் தகவல்களை வெளியிட்டதாக விக்கிப்பீடியா இணையதளத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ்
November 6, 2024, 12:39 pm
தெலங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
November 6, 2024, 7:11 am
ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்திய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸ் வழக்கு
November 5, 2024, 11:01 pm
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மதிப்பளிக்க வேண்டும்: ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த்
November 5, 2024, 6:00 pm
திருமலையில் ஹிந்துக்கள் மட்டும்: வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் : ஒவைசி விமர்சனம்
November 5, 2024, 5:41 pm