நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கல்வீச்சை தொடர்ந்து ரயில் மீது துப்பாக்கிச்சூடு

புவனேஸ்வரம்:

ஒடிஸாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சில தோட்டாக்கள் ஜன்னல் கண்ணாடிகளை துளைத்து உள்ளே வந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

தற்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி ஆனந்த் விஹாருக்கு ஒடிஸாவின் புரி, பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9மணியளவில் புறப்பட்ட விரைவு ரயில் மீது புறப்பட்ட 5 நிமிஷங்களில் மர்ம நபர்கள் ரயிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset