செய்திகள் இந்தியா
ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்திய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸ் வழக்கு
திருச்சூர்:
திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழாவில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸில் வந்து இறங்கிய நடிகரும், ஒன்றிய சுற்றுலாத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழாவில் பங்கேற்பதற்காக சேவா பாரதி அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கினார்.
மருத்துவ அவசரப் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2024, 7:52 am
தோனியுடன் ட்ரம்ப்: வைரலாகிவரும் போட்டோ
November 6, 2024, 2:30 pm
உ.பி.யில் மதரஸாக்களை மூடும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து
November 6, 2024, 2:23 pm
கல்வீச்சை தொடர்ந்து ரயில் மீது துப்பாக்கிச்சூடு
November 6, 2024, 1:17 pm
பொய்த் தகவல்களை வெளியிட்டதாக விக்கிப்பீடியா இணையதளத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ்
November 6, 2024, 12:39 pm
தெலங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
November 6, 2024, 12:27 pm
வக்பு மசோதா தலைவர் மீது எதிர்க்கட்சிகள் புகார்
November 5, 2024, 11:01 pm
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மதிப்பளிக்க வேண்டும்: ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த்
November 5, 2024, 6:00 pm
திருமலையில் ஹிந்துக்கள் மட்டும்: வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் : ஒவைசி விமர்சனம்
November 5, 2024, 5:41 pm