நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுமி செல்லமாக வளர்த்த ஆடு கொடுத்த 3 லட்சம் அமெரிக்க டாலர்

கலிப்போர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு விவசாய, சமூக திறன்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு திட்டத்தின் கீழ் ஓர் ஆடு வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த ஆட்டை திட்ட அதிகாரிகள் பெற்றுச் சென்றுவிடுவார்கள்.

ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டுக் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்படும்.

செல்லமாக வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு கொடுக்க சிறுமிக்கு மனம் வரவில்லை.

ஆனால் திட்ட அதிகாரிகள் ஒப்பந்தப்படி ஆட்டை அழைத்துச் சென்று ஏலத்தில் விட்டு விற்றுவிட்டனர்.

அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் சிறுமி கவலையில் ஆழ்ந்துள்ளர். 

ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. ஏலமிடப்பட்ட ஆடு பலியிடப்பட்டது.

சிறுமியின் தாய், ஏல நிறுவனம் மீது நீதிமன்றத்தில் முறையிட்டாள். 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

பலியான ஆட்டிற்காக 3 லட்சம் அமெரிக்க டாலர் சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset