நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை வாகன எண்ணிக்கை 4 மில்லியனாக அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்ப்பு

கோலாலம்பூர்:

தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை  4 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து சிக்கலின்றி இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், வார இறுதியில் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அந்த ஆணையம் செயல்படுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ மொஹம்மத் சுஹைமி ஹாசன் (Mohd Shuhaimi Hassan) குறிப்பிட்டுள்ளார்.

"நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகள், சில பாதைகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை, கிழக்குக் கரை நெடுஞ்சாலை, காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை ஆகியவற்றில் இத்தகைய இடையூறுகள் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்," என்றார் Mohd Shuhaimi Hassan.

நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும், தேசிய பாதுகாப்பு மன்றமும், சுகாதார அமைச்சும் வகுத்துள்ள அனைத்து SOPக்களும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் தங்களுடைய வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்பே, Touch ‘n Go அட்டைகளில் போதுமான தொகை உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

ஓட்டுநர்கள் உரிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் எனன்றும் நெடுஞ்சாலை ஆணையம் மேலும் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset