நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை இணை அமைப்பினர், ஆதரவாளர்கள் தீபாவளிக்கான சிண்டா புராஜெக்ட் கீவ் மையத்திற்கு நன்கொடை வழங்கினர் 

 

சிங்கப்பூர்:

சிண்டா ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக புராஜெக்ட் கீவ் திட்டத்தின் வழியாக நன்கொடை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடும். இந்த திட்டத்தின் மூலம் பெருந்தனக்காரர்கள், அமைப்புகள் மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களும் தங்களால் இயன்ற பொருளுதவியை சிண்டா புராஜெக்ட் கீவ் மையத்திற்கு சென்று வழங்குவார்கள். 

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை, இணை அமைப்பினர், ஆதரவாளர்களை ஊக்குவித்து அனைவரையும் நன்கொடை அளிப்புக்கு ஒருங்கிணைத்து வருவதோடு சிண்டாவுக்கும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே பாலமாகவும் இருந்து வருகிறது. 

கடந்த 18 அக்டோபர் வெள்ளிக்கிழமை மாலை, இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி முன்னிலையில் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா அன்பரசுவிடம் இந்திய முஸ்லிம் பேரவையினர் ஆறாயிரத்து நூறு சிங்கப்பூர் வெள்ளியை வழங்கினர். 

சிறப்பான இந்த முன்னெடுப்புக்கு சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், முஸ்லிம் லீக் சிங்கப்பூர், நாகப்பட்டினம் சங்கம், பொதக்குடி சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், தக்கலை முஸ்லிம் சங்கம், சலாம் அமைப்பு , நாகூர் சங்கம் , அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி மற்றும் கலாச்சார சங்கம் , கட்டிமேடு ஆதிரெங்கம் சங்கம், திருவிதான்கோடு முஸ்லிம் யூனியன், எஸ். ஹெச் . முஹம்மது முஸ்தபா,  ஆடிட்டர் அசன் மசூது, நைனா முஹம்மது அன் சன்ஸ், வி. எஸ். என்.  காதர்அலி, பாவா டெலிகசி ஆகியோர் ஆதரவு அளித்தனர். 

பலரும் ஒன்றிணைந்து வந்து நன்கொடை அளித்ததை மூத்த துணை அமைச்சரும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரியும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset