செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
ஷாஆலம்:
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நாடடில் வாழும் இந்து மக்கள் இன்று தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இல்லத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.
காலை முதல் அதிகமானோர் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாஅன்வார் இப்ராஹிம் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தார்.
அவருக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். அதே வேளையில் பிரதமருடன் அவர் அனிச்சல் வெட்டி மகிழ்ந்தார்.
மேலும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் உட்பட பல தலைவர்கள் இத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
பல பணிகளுக்கு மத்தியில் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm
97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா
January 2, 2025, 4:21 pm