செய்திகள் மலேசியா
தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர்
புத்ராஜெயா:
மலேசியர்கள் தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும்
கொண்டாட வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த இத்தீபாவளி பண்டிகை, வாழ்க்கையில் இருள் என்னும் தீமைகள் யாவும் நீங்கி நன்மைகள் சூழும் ஒளித் திருநாளாகவும் அமைந்துள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நம் மக்களிடையே புரிந்துணர்வையும் மதிப்பையும் வளர்க்க வேண்டியது அவசியம்.
அவ்வகையில், இந்நந்நாளில் இன ஒற்றுமையை வளர்த்து, பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிந்து, துன்பத்தில் வாழ்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மேலோங்கச் செய்ய வேண்டும்.
எனவே, இந்தத் தீபாவளி திருநாள் புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடப்படுவதோடு,
அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இந்தியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2025, 11:09 am
இரு ஆண்டுகள் அரசியல் நிர்வாகத்தில் ஊழல்கள் எதுவும் நடக்கவில்லை: பிரதமர் அன்வார்
January 3, 2025, 10:02 am
2025 முதல் காய்கறிகளை வளர்க்கத் தொடங்குங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm