நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு

 

கோலாலம்பூர்:

1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நஜிப் அதிகார துஷ்பிரயோகம், 1 எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி ஆகிய 25 குற்றச்சாட்டுகளில் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

நஜிப்புக்கு எதிரான முதன்மையான வழக்கை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றதாக நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா கூறினார்.

பிப்ரவரி 2011, டிசம்பர் 2014 க்கு இடையில் அவரது ஆம் பேங்க் கணக்கில் செலுத்தப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி நிதியை உள்ளடக்கிய நான்கு முறை அதிகார துஷ்பிரயோகம்,  21 பணமோசடி குற்றச்சாட்டுகள் மீது நஜிப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

2019 ஆகஸ்ட் 28 முதல் மே 30 வரை 253 நாட்கள் நீடித்த இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 50 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset