நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset