நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவின் ரேச்சல் குப்தா வாகை சூடினார் 

பேங்காக்: 

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்  போட்டியில் இந்தியாவின் ரேச்சல் குப்தா வாகை சூடினார். 

வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 

12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த 'மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்' போட்டியில் இந்திய அழகி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.

பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிஜே ஒபைசா என்பவர் 2-ஆம் இடம் பிடித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset