
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டது: இந்திய தூதர்
புது டெல்லி:
கனடா இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது என அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா குற்றம்சாட்டினார்.
காலிஸ்தான் முன்னணித் தலைவர்களில் ஒருவரா ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்திய உளவு அமைப்புகளும்தான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரொடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தூதரக பிரச்னையில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 12ம் தேதி கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நான் சென்றபோது நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்தகவல் அளிக்கப்படவில்லை. எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm