நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்களா வீட்டில் கொள்ளையடித்த சம்பவம்: ஐந்து இந்திய இளைஞர்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர் 

கிள்ளான்:

இம்மாத தொடக்கத்தில் கிள்ளானில் உள்ள பங்களா வீடொன்றில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்நிய இளைஞர்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினர் 

கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றஞ்சாட்டப்பட்ட  28 வயது எம்.லிங்கேஸ்வரன், 38 வயது தமிழ்க்குமரன், 33 வயது ஜி.சிவா, 33 வயது வயது ஆர். தமிழரசன், மற்றும் 28 வயதான எஸ் நாகேன் ஆகியோர் நீதிபதி ஷரிஃபா ஹஸ்சின்டி முன் நிறுத்தப்பட்டனர். 

இந்த ஐவரும் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அதிகாலை 6.16 மணியளவில் கிள்ளான் பண்டாமாரானில் உள்ள ஓர் இந்திய நபரின் வீட்டிற்குள் நுழைந்து முகமூடி அணிந்த நிலையில் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். 

74,500 ரிங்கிட் பெருமானமுள்ள பொருட்களை அவர்களைக் கொள்ளையடித்து சென்றனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை, மற்றும் பிரம்படி தண்டனைகள் வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395& 397 பிரிவின் கீழ் எதிநோக்கியுள்ளனர் 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 8ஆம் தேதி மறுசெவிமடுக்கப்படும். இந்நிலையில் ஐவரும் தலா 10,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிபதி ஷரிஃபா அனுமதி அளித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset