நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்

செந்தோசா:

பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இந்திய சமூகத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என சிலரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

பிரதமர் மீதான இந்த விமர்சனங்கள், தாக்குதல்கள் சமுதாயப் பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு மித்ரா, தெக்குன் திட்டங்கள் மூலம் உதவிகளை வழங்கியுள்ளது மட்டுமல்லாமல், பல்வேறு அமைச்சுகள் மூலம் உதவி வழங்குவதில் பல்வேறு கருவிகளைக் கொண்டுள்ளது.

விமர்சகர்கள் இந்திய சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த ஒதுக்கீட்டை விரும்பினால், உண்மைகளுடன் வாதிட முன்வர வேண்டும்.

இந்திய சமூகம் மித்ரா, தெக்குனில் இது மட்டுமே ஆதரவைப் பெறுகிறது என்று கூறும் விமர்சனங்கள் தவறான தகவல் அல்லது வேண்டுமென்றே உண்மையைப் புறக்கணிக்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி, வணிகம், சுகாதாரம், வீட்டு வசதி, நலன் போன்ற துறைகளில் இந்தியர்கள் உட்பட அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.

இத்திட்டங்களின் வாயிலாக எப்படி பயன் பெற முடியும் என்பது அனைவரின் சிந்தனையாக இருக்க வேண்டும்.

அதுதான் முன்னோக்கி செல்வதற்கான வழி.

ஆனால் குற்றம் செல்பவர்கள் ஒரு பகுதியை மட்டும் வைத்து சாடுவது நியாயம் அல்ல என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset