நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மகன் மரணத்துக்கு செயற்கை நுண்ணறிவு பேசியதே காரணம்: தாய் குற்றச்சாட்டு 

அமெரிக்காவின் ஃப்லொரிடா (Florida) பகுதியில் "Character.AI" எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்துள்ளார்.

அவருடைய 14 வயது மகன் பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்ததுள்ளார்.

நிறுவனத்தின் தானியக்க உரையாடல் வசதி (chatbot) உண்மையான நபரைப் போலவே உரையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தம் மகன் பாலியல் ரீதியான உரையாடல்கள், தற்கொலை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றில் ஈடுபட அந்தச் சேவை காரணம் என்று தாய் சொன்னார்.

சம்பவத்திற்கு "Character.AI" நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.

மேலும் 18 வயதுக்குக் குறைந்த பயனீட்டாளர்களைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகள் எடுப்பதாக அது சொன்னது.

"Character.AI" நிறுவனர்கள் முன்னதாக Googleஇல் பணிபுரிந்தனர்.

எனவே Googleக்கும் அந்த உரையாடல் சேவையின் உருவாக்கத்தில் பங்குண்டு என்று வலியுறுத்தினார்.

இருப்பினும், Google குற்றச்சாட்டை மறுத்தது.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset