செய்திகள் உலகம்
பிரிக்ஸ் கரென்சி: டாலரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தயாராகிறது
மாஸ்கோ:
ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்க கரென்சியான டாலரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிரிக்ஸ் கரென்சி உருவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பில் உள்ள நாடுகள் வலியுறுத்தின, இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் கரென்சியின் தோற்றத்தை ரஷிய அதிபர் புதின் அறிமுகம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பான பிரிக்ஸில் எகிப்து, எத்தியோப்பியா, இரான், செளதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
எனினும், ரஷியாவில் நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டில் சுமார் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
உலக மக்கள் தொகையின் 45 சதவீதம் கொண்டு நாடுகளும், 45 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் இந்தக் கூட்டமைப்பின் கீழ் வந்துள்ளது.
உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க தற்போதைக்கு அந்தந்த நாடுகளின் சொந்த கரென்சியை வைத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் வரும்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு என்று தனி கரென்சி உருவாக்கலாம் என்றும் அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
பிரிக்ஸ் கரென்சி அமெரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையாக அமைந்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் கூட்டு செயல்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளை பிரிக்ஸ் நாடுகள் ஆராய வேண்டும். பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வர்த்தக கூட்டாளிகளும் உள்ளூர் செலாவணியில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி, போதைப்பொருள் கடத்தல், ஊழல், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான தங்கள் பொறுப்பை பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
