நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வக்பு மசோதா கூட்டத்தில் பாட்டில் வீச்சு: திரிணமூல் எம்பி இடைநீக்கம்

புது டெல்லி: 

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கும், பாஜக எம்.பி.யும் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாயவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி, கண்ணாடி தண்ணீர் பாட்டிலை உடைத்து, குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பாலை நோக்கி வீசினார். அவர் மீது பாட்டில் படவில்லை.

பாட்டிலை வீசிய பானர்ஜியின் கையில் காயம் ஏற்பட்டது.

பானர்ஜியின் மோசமான நடத்தையைக் கண்டித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்து அவர் ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினர் முஹம்மது அப்துல்லா  ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

இதில் ஒடிஸாவை சேர்ந்த முன்னாள் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் அடங்கிய இரு அமைப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. மசோதாவில் இவர்களின் பங்களிப்பு என்ன? என்பதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள்,  என்ற கேள்வி எழுப்பினர்.

அப்போது, திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசிக் கொண்டிருந்தபோது பேச்சுக்கு இடையே பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய குறுக்கிட்டு பேசினார்.

அப்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வங்க மொழியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி, தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து, தலைவர் ஜெகதாம்பிகா பாலை நோக்கி வீசினார்.

இச்சம்பவத்தில் தலைவர் காயமின்றி தப்பினார். அதேநேரம், பானர்ஜியின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset