நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்

கொல்கத்தா: 

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில்  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி  14 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மருத்துவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

17வது  நாள்களாக நீடித்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மம்தா, போராட்டத்தை கைவிட வேண்டும். மருத்துவர்களின் அனைத்துக் குறைகள் மீதும் கவனம் செலுத்தப்படும். மருத்துவர்கள் கோரும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு பணியாற்ற மாநில அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்ட மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset