நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்:  

ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக  நசீப் சொளதரியின் வீட்டை புல்டோசரை கொண்டு மாநகராட்சி இடித்துள்ளது.

புல்டோசர் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் அல்லது இடித்த கட்டிடத்தை திரும்ப கட்டித் தர வேண்டியிருக்கும் என்று கூறி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜெய்பூரில் சரத் பூர்ணிமா கொண்டாட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றதால் அப் பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் நசீப் செளதரிக்கும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து, நசீப் செளதரிக்கு சொந்தமான வீடு ஆக்கிரமித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி ஜெய்ப்பூர் மாநகராட்சியினர்  புல்டோசர் கொண்டு இடித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset