நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்

புது டெல்லி:

இந்தியாவில் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

4 நாள்களில் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இது போலி என்பது பி்ன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

விமானங்களில் விதிமீறும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எதிராக எந்த விதிகளும் இல்லை. .

இதுபோன்ற நபர்கள் விமானங்களில் பயணிக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset