நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது

புது டெல்லி:

ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான காலத்தை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாகக் குறைத்து ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 1ம் தேதிமுதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

அக்டோபர் 31ம் தேதி வரை 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். 60 நாள்கள் முன்பதிவு காலத்தை தாண்டி முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை ரத்து செய்யவும் அனுமதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான 365 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் கால அளவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset