நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

20,000 குற்றவாளிகள் வீட்டுக் காவலுக்கு பரிசீலிக்க தகுதியுடையவர்கள்: சைபுடின்

கோலாலம்பூர்:

நாட்டில் 20,000 குற்றவாளிகள் வீட்டுக் காவலுக்கு பரிசீலிக்க தகுதியுடையவர்கள்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான புதிய மசோதா  ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சுமார் 20,000 குற்றவாளிகள் ஸ்கிரீனிங் செயல்முறைக்கு உட்பட்ட பிறகு  இதற்கு பரிசீலிக்கத் தகுதியானவர்களாக விளங்குகின்றனர்.

கடுமையான குற்றத்தைச் செய்யாத முதல் குற்றவாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் உள்ளிட்டோரை இந்த மசோதா உள்ளடக்கும்.


நான் சொன்னது போல், முதல் குற்றவாளிகள் 20,000 பேர் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீதும் இது குறிவைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வறுமையில் வாடும் தனித்து வாழும் தாய் தன் குழந்தைக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக பால் திருடுகிறாள். இதனால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அத்தாய் இதற்கு தகுதி பெற்றவர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset