நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தானில் RM3,00,000 மதிப்புள்ள 84 ஊர்வனங்கள் பறிமுதல் 

தும்பாட்:

பெங்காலான் கூபோர் அருகேயுள்ள கம்போங் மெந்துவாவில் பொது செயல்பாட்டு குழு நடத்திய சோதனையில் 300, 000 ரிங்கிட் மதிப்புள்ள 84 உயிருள்ள ஊர்வனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதில் 70-க்கும் மேற்பட்டவை பாம்புகளாகும். 

நேற்று காலை 6.30 மணியளவில் சுங்கை கோலோக் ஆற்றங்கரை அருகே பல பெட்டிகள், பிளாஸ்டிக் கொள்கலன்களுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் கடத்திச் சென்றதைக் கண்ட குழு அவர்களை பிடிக்க முயன்றதாகவும் ஆனால் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி டத்தோ நிக் ரோஸ் ஆசான் நிக் அப் ஹமீத் கூறினார்.

தொடர்ந்து, பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்களைச் சோதனையிட்ட பிறகு, அவர்கள் பல்வேறு வகையான பாம்புகள், ஆமைகள் மற்றும் 'ஸ்பைனி டெய்லர் மானிட்டர்' இனத்தின் பல்லிகளைக் கண்டுபிடித்தனர். 

மேலும், இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிற ஊர்வனவற்றில் ஒன்பது ஆமைகள் மற்றும் ஐந்து பல்லிகள் அடங்கும்.

அவை தாய்லாந்தில் இருந்து உள்ளூர் சந்தைக்காக கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset