நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கடை வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்; கடைகள் அப்புறப்படுத்தியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: பிரபாகரன்

கோலாலம்பூர்: 

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கடை வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

அதே வேளையில் கடைகள் அப்புறப்படுத்தியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட கடைகளை நகராண்மைக் கழக டிபிகேஎல் அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர்.

இதனால் இந்த விவகாரம் நேற்று முதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில் இப் பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தான் இன்று இப் பகுதிக்கு வந்ததுடன் இங்குள்ள வியாபாரிகளையும் சந்தித்தேன்.

கடைகளுக்கு முறையாக பெர்மிட் இல்லாதது தான் இப்பிரச்சினைக்கு காரணமாகும்.

ஆகையால் இந்த விவகாரம் குறித்து டிபிகேஎல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப் பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்கப்படும். அதே வேளையில் இச் சாலையும் தற்காலிகமாக மூடப்படும்.

மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset