நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு திட்டம்: நேரடி நிலவரங்கள் (LIVE)

2025ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு திட்டம்: நேரடி நிலவரங்கள் (LIVE) : 

1. பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்துகொண்டிருக்கிறார் 

2. மடானி பொருளாதார மேம்பாட்டினை முன்னிருத்தி டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்றாவது முறையாக வரவு செலவினை தாக்கல் செய்கிறார் 

3. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: 421 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

4. மலேசிய இந்தியர்களின் சமூக, புத்தாக்கம், மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு 

5. பழுதடைந்த பள்ளிகளை மறுசீரமைக்க அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு. இந்த நிதி ஒதுக்கீட்டில் தேசியப் பள்ளி, சீன பள்ளி, தமிழ்ப்பள்ளி, சமயப்பள்ளி,  ராணுவப் பள்ளி  மற்றும் சிறப்பு கல்வியியல் பள்ளிகள் அடங்கும் 

6. நாடு முழுவதும் நில அமிழ்வு ஏற்பட்டிருக்கும் பகுதிகளைச் சீரமைக்க 250 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

7. அன்வார் தலைமையிலான மாடனி அரசின் மூன்றாவது பட்ஜெட். அதோடு  12ஆம் மலேசிய திட்டத்தின் (2021-2025) கீழ் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் ஆகும்.

8. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அரசாங்கம் அடுத்தாண்டு 360 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு.

9. சர்க்கரை பானங்களுக்கான தீர்வை வரி ஜனவரி 1-ஆம் தேதி முதல் லிட்டருக்கு 40 சென் உயர்த்தப்படும்

10. மருத்துவமனையிலுள்ள பழுதடைந்த கழிப்பறைகள், புதிய படுக்கைகள் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை பராமரிக்க மொத்தம் 1.35 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

11. RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானியம் 2025ஆம் ஆண்டின் மத்தியில் செயல்படுத்தப்படும். 

12. உயர்க்கல்வி அமைச்சகத்திற்கு 18 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

13. பள்ளிகளில் வழங்கும் இலவச உணவு திட்டத்திற்கு 870 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

14. MATRADE மூலம் 40 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது, இது மலேசியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு, மலேசிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சர்வதேச அளவில், குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா லத்தீன், மத்திய கிழக்கில் புதிய சந்தைகளை தேடும் பணிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில், செலவீனத்தை மீட்டெடுக்க உதவுவதற்கான நிதியாக அமையும்.

15. அனைத்துப் பொதுப் பல்கலைக்கழகங்களிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பழைய உபகரணங்களை மாற்றவும், இணைய அணுகலை விரிவுபடுத்தவும் மொத்தம் 635 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

16. தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 1700 ரிங்கிட்டாக உயர்வு: அடுத்தாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமல்

தொடர்புடைய செய்திகள்

+ - reset