நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவானைச் சுற்றி சீனா இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது

தைப்பே:

தைவானைச் சுற்றி சீனா திங்கட்கிழமை பெரியளவில் இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. 

இந்த இராணுவப் பயிற்சி தீவுகளுக்கு உரிமை கோரும் மீட்கும் நடவடிக்கையாகும். 

அங்கு விமானங்கள், கப்பல்களைச் சீனா நிறுத்தியுள்ளது. 

இப்பயிற்சி இரு ஆண்டுகளில்  நான்காவது சுற்றாக நடந்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Joint Sword-2024B எனப் பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனப் படைகளின் செயல்பாட்டுத் திறனைச் சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெய்ஜிங் "தைவான் சுதந்திர" படைகளுக்குக் கடுமையான்  எச்சரிக்கையை விடுத்தது.

இந்தப் பயிற்சி நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை என்று வலியுறுத்தியது.

சீனா-தைவான் இடையிலான உள்நாட்டுப் போர் கடந்த 1949-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. 

- தர்மாவதி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset