நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு யார் உதவினாலும் கடும் நடவடிக்கை: மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: 

இஸ்ரேலுக்கு எந்த நாடு உதவி செய்தாலும் அந்த நாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.

கடந்த 1-ஆம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது. 

சில ஏவுகணைகள் டெல் அவிவ் நகரில் விழுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. மக்கள் பதுங்கு குழிக்குள் செல்லுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளின் வான் எல்லைகள் வழியாக ஈரானின் பல்வேறுபகுதிகள் மீதும் ஒரே நேரத்தில்தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வான்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், ஈரானின் அணு ஆயுத தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த சூழலில் ஈரான் வெளியுறவுத் துறை, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கு தூதரகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “இஸ்ரேலுக்கு உதவி செய்யும் நாடுகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஏதாவது ஒரு நாடு தனது வான்பரப்பை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதித்தால் அந்தநாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்று ஈரான்வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset