நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தீபாவளியை வரவேற்கத் தயாராகும் சிங்கப்பூர் 

சிங்கப்பூர்: 

SBS Transit, SMRT, Go-Ahead Singapore, Tower Transit Singapore ஆகியவற்றுடன் சேர்ந்து தீபாவளிக்கான அலங்காரங்களை MRT நிலையங்களிலும் பேருந்துகளிலும் காட்சிக்கு வைத்துள்ளன.

இன்று நேற்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை, வண்ணமயமான சுவரோவியங்களையும் தீபாவளி அலங்காரங்களையும் ரயில்கள், பேருந்துகள், MRT நிலையங்கள் ஆகிய இடங்களில் மக்கள் கண்டுகளிக்கலாம்.

குறிப்பிட்ட சில ரயில்களிலும் பேருந்துச் சேவை எண்கள் 12, 30, 67, 147, 969 ஆகியவற்றிலும் மக்கள் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.

சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளை தீபாவளி ரயில்களை நேற்று அறிமுகம் செய்தார்.

விழாக்காலங்களில் ரயில், பேருந்துப் பயணங்களை மேலும் சிறப்பானதோர் அனுபவமாக்க நிலப் போக்குவரத்து ஆணையம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset