நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் தோணியில் பயணித்த ஒருவர், தோணி கவிழ்ந்து உயிரிழந்தார்  

கொழும்பு: 

வெள்ளம், புயல் காரணமாக நிலவிவரும் சீரற்ற காலநிலையால்  11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் வெள்ளத்தால்  ஏராளமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளம், கடும் காற்று, மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 233 என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இன்மையால் அத்தனகலுஓயா மற்றும் களனி, கிங், நில்வலா மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கியுள்ள முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் தோணியில் பயணித்த 34 வயதான ஒருவர், தோணி கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். 

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset