நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொண்டூழியத்தில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப ஒன்றுகூடல்

சிங்கப்பூர்:

2019 இல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நாகப்பட்டினம் சங்கம், கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்திய முஸ்லிம் பேரவையினரோடு இணைந்து தன் மனிதாபிமான சேவைகளை துவங்கியது. அது பொதுமக்களின் பரவலான கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து நற்செயல்களிலும் தொண்டூழியத்திலும் ஈடுபட்டு வரும் நாகப்பட்டினம் சங்கம் கடந்த 2023 இல் முதல் குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சியை சாங்கி சிவில் சர்வீஸ் கிளப்பில் முழுநாள் நிகழ்ச்சியாக மிகச்சிறப்பாக நடத்தியது. 

அதே உற்சாகத்தோடு இவ்வாண்டும் (29 செப் ஞாயிறு) மாணவர்கள், இளையர்கள், மகளிருக்கு என பல்சுவை போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. 

May be an image of 6 people and text

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி முஹம்மது பிலால் உள்ளிட்ட சமூகத் தலைவர்கள் முன்னிலை வகுத்த இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஜாலான் புசார் குழுத்தொகுதி (கொளம் ஆயர்) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

சிறப்பு விருந்தினர், வளர்தமிழ் இயக்கத்திற்கு புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள ஹாஜி நசீர் கனிக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். 

May be an image of 4 people and people smiling

அதன்பின்னர் ஆதரவாளர்களான ராயல் கிங்ஸ் குழுமம், DMY ஜுவல்லரி, டிஃபன் பவன் உணவகம், சுவை ஃபூட்ஸ், பரக்கத் உணவகம், பாவா டெலிகஸி, அல் மதீனா உணவகம், ஷாஆலம் உணவகம், ஷாஹுல் ஹமீது ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

May be an image of 16 people and text

பரபரப்பான இக்காலச் சூழ்நிலையில் குடும்பங்களுக்கிடையே நல்ல பந்தத்தை ஏற்படுத்தி நேரத்தை நல்ல பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி நினைவூட்டியது. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்ணும் கருத்துமாக செய்து  முகமலர்ச்சியோடு அனைவரையும் வரவேற்று உபசரித்த நாகப்பட்டினம் சங்கத் தலைவர் ஹாஜி ஜெஹ்பர் சாதிக், செயலாளர் ஹாஜி சலாஹுத்தீன் உள்ளடங்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். 

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset