செய்திகள் இந்தியா
ஜெய்ப்பூரில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால் பீதி
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஜித்தேந்திர ஜாங்கிட். இவர் தனது காரில் அஜ்மீர் சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து புகை வந்தது.
இதனால் காரை நிறுத்தி, முன்பகுதியை திறந்து பார்த்தார். தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி பாலத்தில் இருந்து இறங்கி வந்த வாகனம்.அப்போது இன்ஜின் தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர் அந்த இடத்தைவிட்டு சென்றார். கார் தீ பற்றி எரிந்ததில் அதன் ஹேன்ட் பிரேக் சேதமடைந்து வண்டி பாலத்தில் இருந்து கீழ் நோக்கி உருண்டது.
தீப்பற்றிய படி ஒரு கார் பாலத்தில் இருந்து வருவதை பார்த்த வாகன ஓட்டிகள், பீதியில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினர். இறுதியில் அந்த கார் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதன்பின் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் ஜெய்ப்பூரின் அஜ்மீர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 10:12 am
Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
December 2, 2024, 1:07 pm
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு
December 2, 2024, 12:59 pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
December 2, 2024, 10:11 am
ஆந்திராவில் வக்பு வாரியம் கலைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
November 29, 2024, 10:23 pm
ஷாஹி ஈத்கா ஜாமா பள்ளிவாசல் ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
November 27, 2024, 3:59 pm
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm