செய்திகள் இந்தியா
மும்பையில் முன்னாள் அமைச்சர் சுட்டுக் கொலை: பிக் பாஸ் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு விரைந்த சல்மான் கான்
மும்பை:
மும்பையில் துணை முதல்வர் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள மகாராஷ்டிரத்தில் இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துப்பாக்கி சூடு கொலை பாலிவுட் பிரலங்களையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த துப்பாக்கி சூடுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் ரத்து செய்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
நள்ளிரவில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 10:12 am
Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
December 2, 2024, 1:07 pm
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு
December 2, 2024, 12:59 pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
December 2, 2024, 10:11 am
ஆந்திராவில் வக்பு வாரியம் கலைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
November 29, 2024, 10:23 pm
ஷாஹி ஈத்கா ஜாமா பள்ளிவாசல் ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
November 27, 2024, 3:59 pm
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm