நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும்?: ராகுல்

புது டெல்லி: 

ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும் என்று சென்னை அருகே நடைபெற்ற ரயில் விபத்தை குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ராகுல்,  ஒடிஸா மாநிலம் பாலசோர் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த கோர விபத்தைப்போல் கவரைப் பேட்டை ரயில் விபத்து உள்ளது.

இதுபோன்று பல ரயில் விபத்துகள் நிகழ்ந்து, ஏராளமான பயணிகள் உயிரிழந்தபோதும், ரயில்வே நிர்வாகம் இன்னும் எந்தவொரு பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த ரயில் விபத்து காட்டுகிறது.

இதற்கு பொறுப்பேற்பது என்பது, உயர்மட்டத்திலிருந்து தொடங்குகிறது. மத்திய அரசு விழித்துக் கொள்வதற்கு, இன்னும் எத்தனை குடும்பங்கள் பலியாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset