நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உலக பட்டினிப் பட்டியலில் 61 ஆவது இடத்தில் மலேசியா - இந்தியாவுக்கு 105

புது டெல்லி:

127 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பட்டினிப் பட்டியில் மலேசியா 61-ஆவது இடத்திலும் இந்தியா 105-ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா தீவிர பகுப்பாய்வுக்கு உள்படுத்தும் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகளில் பசியால் பாதிக்கப்படுபவர்களின் அளவீடுகள், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச பட்டினிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான கன்சர்ன் ஓல்டுவைட், ஜெர்மனி நிறுவனமான வெல்த் ஹங்கர்லைப் ஆகியவை இந்தப் பட்டியலை தயாரிக்கின்றன.

அதில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 105ஆவது இடத்தில் உள்ளது. இதன்மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 42 நாடுகளை உள்ளடக்கிய "தீவிரமான பகுப்பாய்வு' செய்ய வேண்டிய பிரிவுக்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது.

மலேசியா 12.7 புள்ளிகளுடன் 61-ஆவது இடத்தில் உள்ளது.

பூஜ்ஜியம் சிறந்த மதிப்பெண்களில் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன்  சீனா, ரஷியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 22 நாடுகள் முதலிடத்தில் உள்ளன.

கடைசி 5 இடத்தில் 123 காங்கோ, 124 மடகாஸ்கர், 125 சாட் ,126 யேமன், 127 சோமாலியா ஆகியவை உள்ளன.

உலக அளவில், ஒவ்வொரு நாளும் சுமார் 73.3 கோடி பேருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பட்டினியை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset