நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கூகுள் மேப்பை பின்தொடர்ந்து கிணற்றில் விழுந்த கார்: உயிர் தப்பிய இளம் தம்பதி

கொச்சி: 

கொச்சியில் கூகுள் மேப்பை பின்தொடர்ந்து சென்ற கார் 15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது.

கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்தது. இதனால் காரில் இருந்த தம்பதி உயிர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

பட்டிமட்டம் அருகே சாலையில் கூகுள் மேப்பை பின்தொடர்ந்து காரில் வந்த தம்பதி பள்ளத்தை கவனிக்காமல் அவர்கள் காரை செலுத்தியபோது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் கார், அங்கிருந்த கடை மீது மோதி பின்னர் அருகிலிருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய தம்பதி, காரின் பின்பக்க கதவு வழியாக வெளியேறி, உதவி கிடைக்கும் வரை காரின் மீது ஏறி காத்திருந்துள்ளனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் தம்பதியை ஏணி மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset